இதுதான் உங்க பெண்ணியமா?- தீபிகா படுகோன் செய்த காரியத்தால் கடுப்பில் அர்ஜூன் ரெட்டி இயக்குனர்?

Author: Prasad
27 May 2025, 4:20 pm

வெளியேறிய தீபிகா படுகோன்

“அர்ஜூன் ரெட்டி”, “அனிமல்” போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்ததாக இயக்கப்போகும் திரைப்படம் “ஸ்பிரிட்”. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க உள்ளார். முதலில் இத்திரைப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தீபிகா படுகோன் இத்திரைப்படத்தில் இருந்து சில காரணங்களால் விலகிவிட்டார். 

தீபிகா படுகோன் விலகியதற்கு சரியான காரணம் இதுதான் என்று கூறமுடியவில்லை என்றாலும் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து பல செய்திகள் உலா வருகின்றன. அதாவது தீபிகா படுகோன் அதிகளவு சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. மறுபக்கம் இத்திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள் சில இருப்பதாக சந்தீப் ரெட்டி கூறியதால் அக்காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்த தீபிகா படுகோன் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. 

தீபிகா படுகோன் வெளியேறியதாக செய்திகள் தெரிவித்த நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை திரிப்டி திம்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சந்தீப் ரெட்டி வங்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அறிவித்ததோடு மட்டுமல்லாது தனது எக்ஸ் பக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் ஒருவரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதான் பெண்ணியமா? 

“நான் ஒரு கதையை ஒரு நடிகரிடம் கூறும்போது அதில் 100% நம்பிக்கை வைக்கிறேன். நடிகருக்கும் எனக்கும் சொல்லப்படாத ஒரு வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தம் இருக்கும். ஆனால் இதனை செய்ததில் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள். 

ஒரு இளம் நடிகரை கீழே இறக்குவதும் எனது கதையை வெளியே கசியவிடுவதும். இதுதான் உங்கள் பெண்ணியமா?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது ஒரு அழுக்கான PR  (Dirty PR) விளையாட்டு என்றும் அப்பதிவில் விமர்சித்துள்ளார். 

“ஸ்பிரிட்” திரைப்படத்தின் கதையை தீபிகா படுகோன் தனது நெருக்கமான ஒருவரின் மூலம் கசியவிட்டுவிட்டார் என்று செய்திகள் தெரிவித்த நிலையில்தான் சந்தீப் ரெட்டி வங்கா இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

  • dd next level movie sad collection report கலெக்சனில் மண்ணை கவ்விய டிடி நெகஸ்ட் லெவல்? இப்படி ஒரு நிலைமையா வரணும்!
  • Leave a Reply