“அம்மி அம்மி மிதித்து”-ன்னு பாடிய மெட்டி ஒலி சாந்தியா இது ?- இப்போ எப்படி இருக்கார் பாருங்க !

7 February 2021, 11:30 am
Quick Share

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான்.

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் விதை போட்டது மெட்டி ஒலி தான்.

2000களில் ஒளிபரப்பான அனைவராலும் மறக்கமுடியாத ஒரு சீரியல் தான் மெட்டி ஒலி. இன்று அளவும் “அம்மி அம்மி அம்மி மிதித்து” என்று தொடங்கும் அந்த சீரியலின் பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ்.

அந்த பாடலில் ஆட்டம் போட்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகைதான் சாந்தி மாஸ்டர். சூப்பரா Dance ஆடக்கூடிய, சாந்தி தனது 13 ஆம் வயதிலிருந்தே குரூப் டான்சராக இருந்துள்ளார். அதன் பிறகு அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராக ஆகி, அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.தற்போது அவரது புகைப்படங்கள், அவரது குழந்தைகளின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0