“விஜயின் முன்னாள் காதலி சங்கவியா இது, அடையாளமே தெரியல”வாயடைத்து போன ரசிகர்கள் !

15 April 2021, 12:46 pm
Quick Share

கோலிவுட்டில், 90-ஸ் kidsகளின் ஃபர்ஸ்ட் Crush என்று சொல்லும் அளவுக்கு வளம் வந்தவர் சங்கவி. அமராவதி படத்தில் அஜித் மட்டும் அறிமுகம் ஆகவில்லை. அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவியும் அறிமுகமானார். அதன் பின் விஜய், சரத்குமார் கார்த்திக் என பல நடிகர்களின் படத்தில் நடித்தார்.

இவர் கோலிவுட்டில் நுழைந்த புதிதில், விஜயுடன் காதல் வயப்பட்டு இருந்தார். அதன் பிறகு அந்த காதல் ஏனோ தோல்வி அடைந்தது. 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.

நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து நிறைய விஜய் திரைப்படங்களில் அவருக்கு இணையாக நடித்தார். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக அப்போதைய பத்திரிக்கைகள் தெரிவித்தன. அப்போதைய பத்திரிக்கை செய்திகளில் இவர்களை பற்றி கிசுகிசு வராத நாளே இல்லை என்று சொல்லலாம்.

திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காத சங்கவி, ஒரு சில படங்களில் நடித்து வந்தார். வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் பெங்களூரில் கணவர் மற்றும் இவரது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதில் நெகிழும் விஷயம் என்ன என்றால் தனது 42 வது வயதில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றுள்ளார்.

இந்தநிலையில், குழந்தையின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சங்கவி, எனது அழகான தேவதை என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 94

28

10