இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!
Author: Prasad6 May 2025, 6:03 pm
ரொமாண்டிக் இயக்குனர்
இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு தழும்ப தழும்ப காதல் உணர்வை தனது திரைப்படங்களின் மூலம் கொட்டித் தீர்த்தவர் கௌதம் மேனன். ஆனால் சமீப காலமாகவே அவர் இயக்குவதை விட்டுவிட்டு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது கடன் சுமை காரணமாகத்தான் இவர் இவ்வாறு நடிப்பதில் களமிறங்கிவிட்டார் என பலரும் விமர்சனம் வைக்கின்றனர்.

அந்த வகையில் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலரில் கௌதம் மேனன் “காக்க காக்க” திரைப்படத்தில் இடம்பெற்ற “உயிரின் உயிரே” பாடலை ரீகிரியேட் செய்திருந்தது இணையத்தில் வைரல் ஆனது. “எப்படி இருந்த மனுஷன்” என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனர்.
மீண்டும் சந்தானத்துடன்…
இந்த நிலையில் கௌதம் மேனன் சந்தானத்தை கதாநாயகனாக வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். தனது ஸ்டைலில் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய கதையம்சத்துடன் இத்திரைப்படத்தை உருவாக்கவுள்ளாராம் கௌதம் மேனன்.
“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தை தொடர்ந்து “STR 49” திரைப்படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.