சந்தானம் பாடல் சர்ச்சை! இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க?- எடப்பாடியாரின் மைண்ட் வாய்ஸை படித்த ரசிகர்கள்?

Author: Prasad
14 May 2025, 12:07 pm

டிடி நெக்ஸ்ட் லெவல்

சந்தானம் நடிப்பில் வருகிற மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “டிடி நெக்ஸ்ட் லெவல்”. இத்திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். “தில்லுக்கு துட்டு”, “டிடி ரிட்டர்ன்ஸ்” போன்ற திரைப்படங்களின் வரிசையில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படமும் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

santhanam song in dd next level create controversial and request to edappadi palaniswamy

இத்திரைப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற கௌதம் வாசுதேவ் மேனனின் “உயிரின் உயிரே” பாடலின் ரீகிரியேஷன் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலால் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. 

இந்துக்களை புண்படுத்தும் பாடல்

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தில் “கிஸ்ஸா 47” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. இப்பாடல் சிங்கிள் பாடலாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்பாடலில் “ஸ்ரீனிவாசா கோவிந்தா” என்று தொடங்குவது போல் சில வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகள் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக திருமலை திருப்பதியைச் சேர்ந்த ஜனசேனா கட்சியினர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அக்கட்சியின் திருப்பதி பொறுப்பாளரான கிரண் ராயல் என்பவர் திருமலை காவல் நிலையத்தில் “இந்து மக்களின் மனதை இப்பாடல் புண்படுத்துவது போல் அமைந்துள்ளது. இப்பாடலை இத்திரைப்படத்தில் இருந்து நீக்கவேண்டும், இல்லை என்றால் இத்திரைப்படம் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தார்.

santhanam song in dd next level create controversial and request to edappadi palaniswamy

எடப்பாடியாரிடம் கோரிக்கை

இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய சென்றிருந்த நிலையில் திருப்பதி ஜனசேனா கட்சியினர் அவரிடம் “கிஸ்ஸா 47” பாடலை ஒளிபரப்பிக்காட்டி, இப்பாடலை இத்திரைப்படத்தில் இருந்து நீக்கவோ அல்லது இத்திரைப்படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவோ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

santhanam song in dd next level create controversial and request to edappadi palaniswamy

இந்த செய்தி இணையத்தில் பரவிய நிலையில் “எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்து என்ன பயன்?” என பல ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். 

  • Ravi's with Kenisha.... Actress Khushbu's post creates a stir! கெனிஷாவுடன் ரவிக்கு கல்யாணம்? நடிகை குஷ்பு போட்ட பதிவால் பரபரப்பு!
  • Leave a Reply