சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?
Author: Prasad2 May 2025, 5:49 pm
கனிமா…
தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை உலகில் உண்மைக்கு நெருக்கமான கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் என இவரை கூறுவது உண்டு.

பா.ரஞ்சித்தின் “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரசிகர்களை மெய் மறக்கவைக்கும் பல பாடல்களை அளித்து வந்துள்ளார். அந்த வகையில் “ரெட்ரோ” திரைப்படத்தில் கனிமா என்ற பாடலுக்கு ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார். இப்பாடல் டிரெண்டிங் பாடலாக சமூக வலைத்தளத்தை ஆட்கொண்டது. இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் சந்தோஷ் நாராயணன்.
அதில் தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து மிகவும் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார்.
தயவுசெஞ்சு பாடிடாதே?
“கல்லூரியில் இசை என்றால் என்னவென்றே தெரியாத சமயத்தில் என்னுடைய சீனியர் ஒருவர் கல்லூரியின் இசைக்குழுவில் என்னை சேர்த்துக்கொண்டார். இன்று வரை நான் இசையை கற்கவே இல்லை. எல்லாமே குத்துமதிப்பாக அடித்துவிட்டு வந்ததுதான்.
கல்லூரியின் இசைக்குழுவில் நான் சேர்ந்த பிறகு ஒரு நாள் வசீகரா பாடலை பாடச்சொன்னார்கள். அனைவரும் பாடினோம். அவர்களுடன் நானும் பாடினேன். அப்போது அனைவரையும் பாடுவதை நிறுத்தச்சொன்னார் சீனியர். என்னிடம் வந்து தயவு செய்து பாடிறாதே என்று சொன்னார். நான் எப்போது என்று கேட்டேன். எப்போதுமே பாடிறாதே என்று கூறினார்” என இச்சம்பவத்தை மிகவும் நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.

இதனை கேட்ட சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜும் விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ துணுக்கு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
