மதன் கௌரி சார்? நீங்களா? – பிரபல இயக்குனரை பங்கமாய் கலாய்த்த சந்தோஷ் நாராயணன்

Author: Prasad
16 May 2025, 9:14 pm

உதித் நாராயணன் சார் நீங்களா?

நேற்று முன்தினம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், கொலும்புவில் தன்னை உதித் நாராயணன் என நினைத்துக்கொண்ட நபர் ஒருவர், “உதித் நாராயணன் சார், உங்கள் பாடல்களுக்கு நான் ரசிகன்” என தன்னிடம் கூறியதாக நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். 

இப்பதிவு இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் நேற்று சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு பல இயக்குனர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் இயக்குனர் ரத்னகுமார் அவரை வாழ்த்திய எக்ஸ் தள பதிவு ஒன்றும் அதற்கு சந்தோஷ் நாராயணன் அளித்த ரிப்ளையும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 

நன்றி மதன் கௌரி சார்…

இயக்குனர் ரத்னகுமார், சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளிற்காக பகிர்ந்த பதிவில், “ஈஸ்வரா, வானும் மண்ணும் ஹேண்ட்ஷேக் பண்ணது உன்னால் ஈஸ்வரா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உதித் நாராயணன் சார். உங்கள் பாடலுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்” என கூறியிருந்தார். 

இதற்கு ரிப்ளை செய்த சந்தோஷ் நாராயணன், “நன்றி மதன் கௌரி அவர்களே, உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். திரைப்படங்களில் நடிக்கலாமே. எனது நண்பர் ரத்னகுமாரிடம் பரிந்துரைக்கவா?” என இவரும் கிண்டலாக கூறியிருந்தார்.

“மேயாத மான்”, “ஆடை”, “குலுகுலு” போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்னகுமார் லோகேஷ் கனகராஜ்ஜின் நண்பர் ஆவார். இவர் லோகேஷ் கனகராஜ்ஜின் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் பார்ப்பதற்கு ஒரு சாயலில் மதன் கௌரி போல் இருப்பதாக பலரும் கூறுவது உண்டு. 

  • santhosh narayanan trolled rathnakumar as madan gowri மதன் கௌரி சார்? நீங்களா? – பிரபல இயக்குனரை பங்கமாய் கலாய்த்த சந்தோஷ் நாராயணன்
  • Leave a Reply