கர்ணன் படத்தை பார்த்து ரிவ்யூ சொன்ன சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் ட்வீட்

26 January 2021, 1:45 pm
Quick Share

தமிழ் சினிமாவில் அரை டஜனுக்கும் மேல் படம் எப்போதும் கைவசம் வைத்திருக்கும் முன்னணி ஹீரோக்கள் இரண்டே பேர். விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் அதேசமயம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அளவு பிசியாக இருப்பார்கள்.

இதில் தனுஷ் கைவசம் ஹாலிவுட்டில் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, ஜகமே தந்திரம், கர்ணன் என பட்டியல் நீளமாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கர்ணன் படத்தை சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் பார்த்துள்ளார். படத்தை பார்த்து சந்தோஷ நாராயணன் படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கும் படம்தான் கர்ணன்.

அதில் “கர்ணன் படத்தை பார்த்து வியந்து போனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் ஆகியோரை நினைத்து பெருமைப்படுகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்” என பதிவிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்து ஷேர் செய்து வருகின்றனர். வெயிட்டிங்லயே வெறி ஏறுது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Views: - 9

0

0