தம்பியிடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் பிரபலம்; நல்ல அக்காவாக நடந்து கொள்ளவில்லை; உருக்கமான பதிவு,..

Author: Sudha
8 July 2024, 11:00 am

சாரா அலிகான் பிரபலமான பாலிவுட் நடிகை. நடிகர்கள் அம்ரிதா சிங் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோரின் மகள். நடிகர் சைஃப் அலி கான் மனைவியிடம் விவாகரத்து பெற்று நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு , சாரா அலிகான் தனது நடிப்பு வாழ்க்கையை 2018 இல் வெளியான கேதார்நாத் என்ற அதிரடி நகைச்சுவை திரைப்படம் மூலம் தொடங்கினார்.2018 இல் அபிஷேக் கபூரின் காதல் திரைப்படமான கேதார்நாத் வெளி வந்தது.இந்த படத்தில் அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

அட்ராங்கி ரே திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார் சாரா அலி கான்.2021 ஆம் காதல் நாடகத் திரைப்படமாக இது வெளியானது.ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது தம்பிக்காக ஒரு பதிவை போட்டிருந்தார் சாரா அலி கான்.

நான் உனக்கு அக்காவாக நடந்து கொள்ளவில்லை.நாம் இருவருமே நம் தாயால் வளர்க்கப்பட்டவர்கள். நானும் உனக்கு ஒரு தாய் போல நடந்து கொண்டேன், உன்னிடம் அவ்வளவு கண்டிப்பு காட்டி இருக்கக் கூடாது என தனது தம்பியான இப்ராஹிம் அலி கானுக்கு பதிவிட்டு இருக்கிறார் நடிகை சாரா அலிகான்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?