பாகுபலியில் நடித்தபோது என் பெயர் கூட யாருக்கும் தெரியாது..! தல சொன்னதை உதாரணமாக கூறிய வேம்புலி…

Author: Udhayakumar Raman
31 August 2021, 7:02 pm
Quick Share

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் கதை. இதில் இடியாப்ப பரம்பரையில், வேம்புலி எனும் பாக்ஸராக அசத்தி இருப்பவர் ஜான் கொக்கன். கதாபாத்திரத்திற்கு ஒன்றி நடித்ததற்காக ரசிகர்கள் இவரை மெச்சி வருகின்றனர். சர் பேட்டை பரம்பரை படத்தில் நடிப்பதற்கு முன் ஜான் அஜித்தின் வீரம் மற்றும் ராஜமௌலியின் பாகுபலி படத்திலும் நடித்துள்ளார்.

அதில் காலகேயர்கள் கூட்டத்தில் ஒருவராக நடித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தபோது எடுத்த படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பாகுபலியில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அப்போது என் பெயர் கூட யாருக்கும் தெரியாது. ஆனால் எனக்குள் சொல்லிக் கொண்டேன் ஒருநாள் என்னுடைய பெயர் என அனைவருக்கும் தெரியும் என்று. அஜித் சார் சொல்வது போல வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் வரும் நாம்தான் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும், உங்களால் உங்களால் முடியும் என்று நம்ப வேண்டும் என்று கூறுவார் என ஜான் கொக்கன் கூறியுள்ளார்.

Views: - 341

12

2