ஏமாத்திட்டேனா? கல்யாணம் ஆகிடுச்சா?.. பார்த்திபனின் முன்னாள் மனைவி குறித்து பகீர் கிளப்பும் சீரியல் நடிகர்..!

Author: Vignesh
14 August 2024, 2:42 pm

தமிழ் சினிமாவில் 90 காலங்களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. இவர் முன்னணி இயக்குனர் பார்த்திபனை காதலித்து 1990 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்ட சீதா பார்த்திபனுடன் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

அதன் பின்னர், சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர், நடிகை சீதா நடிகர் சதீஷை கடந்த 2019 ல் திருமணம் செய்து விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் காதலர் சதீஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சீதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.

பார்த்திபனிடம் இருந்து அவரை பிரித்தேன் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. உண்மையில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அதுதான் உண்மை. ஒன்றாக வாழ்ந்தோம். விவாகரத்து பெற்று பிரிந்தோம் என்று சொல்வதெல்லாம் சோசியல் மீடியாவும் பத்திரிக்கையும் கிளப்பிவிட்ட செய்திதான். அதில், கொஞ்சம் கூட உண்மை இல்லை. இது சினிமா வட்டாரத்திலும் சின்ன திரையிலும் எங்களுடன் நடித்து வேலை பார்த்தவர்களுக்கு தெரியும்.

அதுமட்டுமின்றி நான் சீதாவுடன் சீரியல் நடிக்கும் போது பார்த்திபனுடன் சீதா முன்பே விவாகரத்து வாங்கிவிட்டார். அதன் பின்னால், எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. என் மனைவி சீதாவால்தான் பிரிந்து சென்றார் என்றும் கூட செய்திகள் வெளியானது. அதுவும் உண்மை இல்லை. அதற்கு முன் என் மனைவி இரு மகன்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். என்னை விட என் மனைவி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நானும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை.

சீதாவை ஏமாற்றி விட்டேன் அவரை பொருளாதார ரீதியாக ஏமாற்றி விட்டேன் என்றும், செய்திகள் வெளியானது. இந்த உலகம் ஆதாரமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசும். செய்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக செய்திகளை எழுதுகிறார்கள். இப்போதும் நானும் சீதாவும் நல்ல நண்பர்கள்தான். என் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், அவர் வருவார் இப்போது அதே நட்புடன் தான் நாங்கள் இருக்கிறோம் என்று வதந்திகள் அனைத்திற்கும் நடிகர் சதீஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!