ஒரே வாரத்தில் பறந்து போன வாரிசு.. என்னடா இது பேனருக்கு வந்த சோதனை : படமாவது நிலைச்சு நிக்குமா?!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 4:12 pm

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் பேனர் வைப்பது வழக்கம். அதேபோல், விஜய்யின் வாரிசு படத்துக்கும், துணிவு படத்துக்காக அஜித்தின் ரசிகர்களும் பேனர் வைத்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள கமலா, சத்யம், வெற்றி உள்ளிட்ட திரையரங்குகளில் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்களை விஜய் ரசிகர்கள் வைத்தனர்.

இது சினிமா பிரியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் பேனர் வைத்த ஒரே வாரத்தில் அது காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.

மாண்டஸ் புயலால் கனமழை பெய்து வருவதால் வாரிசு பேனர் கிழிந்தது. இதையடுத்து பேனரை திரையரங்கு ஊழியர்கள் முற்றிலும் அகற்றினர்.

பிரம்மாண்ட பேனர் வைத்த போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பேனர் இல்லாததால் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!