“2 கோடி வசூலை 20 கோடின்னு சொல்றாங்க” – மாஸ்டர் பட வசூலை கலாய்த்த அமைச்சர் !
21 January 2021, 11:30 amமாஸ்டர் படம் வெளியான அடுத்த ஷோ முதல், சமூக வலைதள டிராக்கர்கள் பலர் இந்த படத்தின் வசூலை தங்கள் கைக்கு வந்த நிலையில் ஏற்றி சொல்வதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறிய கிண்டலான பதில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நம்ம கோலிவுட்டில் வசூல்Box Office விவரங்களை அவரவர்கள் பிடித்த நம்பர் ஒன்றை சமூக வலைதளங்களில் போட்டுகொள்வதாக பலர் கருத்து தெரிவித்து வருவார்கள். எல்லோரும் கூறியபடி உண்மையான வசூல் குறித்த தகவல்கள் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்.
இந்த நிலையில் மாஸ்டர்
பட வசூல் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன் “தங்களது படம் வெற்றி பெற்றுவிட்டது என்று காட்டுவதற்காக 2 கோடி வசூல் செய்ததை 20 கோடி வசூல் ஆனதாக கணக்கு காட்டுவார்கள்” என்று கூறியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
0
0