தமிழ்நாட்டுல மட்டும் இப்படி ஆகிடுச்சு; நினைச்சிக்கூட பார்க்கலை- குபேரா பட இயக்குனரின் வேதனை பேட்டி
Author: Prasad30 June 2025, 5:00 pm
சுமாரான வரவேற்பு பெற்ற குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான “குபேரா” திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது. தெலுங்கில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபீஸிலும் அதிரிபுதிரியான வசூலை பெற்றது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இத்திரைப்படம் சரியாக போகவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ரசிக்கும்படியாக இல்லை.

தனுஷின் அபாரமான நடிப்பை பலரும் பாராட்டினாலும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமே இல்லை என தமிழ் ரசிகர்கள் விமர்சனம் வைத்தனர். குறிப்பாக இத்திரைப்படத்தின் நீளம் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் சேகர் கம்முலா, “குபேரா” திரைப்படம் தமிழ்நாட்டில் வெற்றிபெறாதது குறித்த வேதனையை பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ்நாட்டுல மட்டும் இப்படி ஆகிடுச்சு?
“வெளிநாடுகளில் குபேரா திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழ்நாட்டில் குபேரா படம் பலருக்கு பிடிந்திருந்தும் கூட வரவேற்பை பெறவில்லை.
படம் பார்த்த அனைவரும் பாஸிட்டிவாக கூறினார்கள். ஆனால் அது பாக்ஸ் ஆஃபீஸில் வசூலாக மாறவில்லை. தனுஷ் இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். நான் அவரின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன். இதன் காரணமாக குபேரா தமிழில் வசூலை பெறும் என நம்பியிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை என்பது வேதனைதான்” என அப்பேட்டியில் சேகர் கம்முலா பகிர்ந்துகொண்டுள்ளார்.