வெயிட்டிங்கில் வெறி ஏறுதே – ஏழு மணிக்கு கதை ஆரம்பம் என செல்வராகவன் ட்விட்

12 January 2021, 4:52 pm
Quick Share

செல்வராகவன் தனுஷ் கூட்டணி என்றாலே இப்போது மட்டுமல்ல எப்போதுமே தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்த இந்த வெற்றிக் கூட்டணி, அதன்பின் காதல் கொண்டேன் படத்தில் இணைந்தார்கள். கல்லூரி காலத்தில் நடக்கும் அந்த கதையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த படத்தை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற ஒரு படத்தை (மக்கள் மொழியில் சொன்னால் காவியத்தை) தந்ததற்கு மக்கள் இன்னும் போற்றி கொண்டிருக்கிறார்கள்.

படம் அப்போது சரியாக ஓடவில்லை என்றாலும் பாடல்கள் செம ஹிட்டானது. இத்தனை வருடங்களுக்குப் பின் தற்போது திரையரங்குகளில் வெளியான புதுப்பேட்டை house full ஷோவாக நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியே அமையும் என செல்வராகவன் ட்வீட் செய்திருந்தார்.

அதனையொட்டி என்று ஒரு ட்வீட் வெளியிட்டு இருக்கும் செல்வராகவன், இன்று கதை ஆரம்பம் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரவு 7:10 மணிக்கு வெளியாகும் என தெரிவித்திருக்கிறார். மேலும் அந்தக் ட்வீட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, யுவன் சங்கர் ராஜா, தனுஷ் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

Views: - 8

0

0