முதல் காதலை நெனச்சி நெனச்சி உருகும் செல்வராகவன் – விரைவில் விவாகரத்தா?

Author: Shree
11 April 2023, 9:49 pm

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். தான் கடந்து வந்த இளமை கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

selvaragavan- updatenews369

அதன் பிறகு 2003ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோ. அதில் சோனியா அகர்வால் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் தான் இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு 2010ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். அவ்வப்போது தற்போது வாழ்ந்து வரும் வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படுவது போல் ஏதேனும் குழப்பமான சில பதிவுகளை போட்டு வந்தார். இதனால் மீண்டும் விவாகரத்து செய்யபோகிறாரா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

selvaragavan soniya aggrwal

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது முதல் காதலை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ, நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது. அது வாழ்க்கையில் ஒரு நிமிடம் தான் என்பதை கடவுளும் நம்மிடம் சொல்லவில்லை என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷை தொடர்ந்து நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா என கேட்டுள்ளனர்.

  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 403

    0

    0