கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!

Author: Selvan
20 February 2025, 9:57 pm

வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது.இந்த நிலையில் படக்குழு அமரன் திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றிவிழாவை கொண்டாடியது.

இதையும் படியுங்க: குட்டி ‘சைந்தவி’ என் கூடவே இருக்காங்க…பாச மழை பொழிந்த ஜி.வி.பிரகாஷ்.!

அப்போது கமல்ஹாசன் பேசிய பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அதில் சாய் பல்லவி என்னை சமீபத்தில் சந்தித்த போது என்னை இன்னும் ரவுடி பேபியாக மட்டுமே பார்க்கிறார்கள்,அமரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் என்னை பார்க்கும் விதம் மாறியுள்ளது…நன்றி என கூறினார்.

நான் அதற்கு நீங்கள் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் உங்களுடைய திறமையால் நீங்கள் ரசிகர்கள் மத்தியில் தனியாக தெரிஞ்சிங்க என்று சாய் பல்லவி நடித்த மாரி மற்றும் என்ஜிகே திரைப்படத்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.

தற்போது கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி பேசிய ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லைனா கூட இந்த காளி பொளச்சுக்குவான் சார்,கெட்ட பையன் சார் இந்த காளி என்ற வசனத்தை பகிர்ந்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!