“டிரஸ் போடாம ஒரு Photo அனுப்புங்க….?” சின்மயி அனுப்பிய Photo !

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 9:30 pm
Chinmayi - Updatenews360
Quick Share

தமிழ் திரைத்துறையில் உள்ள பெண்கள் மட்டுமில்லாமல் எல்லா தரப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு குரல் கொடுத்தவர் பாடகி சின்மயி. சில வருடங்களுக்கு முன் பின்னணி பாடகி சின்மயி, வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக அணுகினார் என குறிப்பிட்டிருந்தார். இவரை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தனர்.

இவர் பாடிய பாடல்கள் மூலம் Famous ஆனதை விட, பாடலாசிரியர் வைரமுத்து மீது MeToo புகார் கூறியதன் மூலம் பிரபலமானார். அது உண்மையா பொய்யா என்று இரண்டு வருடங்களாக பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பாடகர் கார்த்திக் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூட புகார் அளித்தார். சர்ச்சையின் செல்ல பிள்ளையான இவருக்கு ஏகப்பட்ட ஆபாச மெசேஜ் வரும்.

இந்நிலையில், “நீங்க டிரஸ் இல்லாம இருக்கும் போட்டோவை அனுப்புங்க” என்று கேட்ட இளைஞர் ஒருவருக்கு செருப்படி தரும் விதமாக ரிப்ளை ஒன்று கொடுத்து அதனை ஸ்க்ரீன் ஷாட் வேறு எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அம்மணி.

இதற்காக சின்மயியை பல தரப்பிலிருந்து பாராட்டி வருகிறார்கள்.

Views: - 1027

2

0