கவனிக்காமல் விட்ட அந்த 2 கெட்ட வார்த்தை; சென்சார் பிடியில் இப்போது 9; ஷாக் வீடியோ,..

Author: Sudha
9 July 2024, 2:15 pm

28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தில் இரண்டு காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. வீடியோவை பார்த்தவர்களோ, அடப்பாவமே இத்தனை வருடங்களாக இதை கவனிக்காமல் போய்விட்டோமே என்கிறார்கள்.இன்னும் சிலரோ,படம் பார்த்தபோதே சந்தேகம் இருந்தது இப்போது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

இந்தியன் முதல் பாகத்தை பார்த்த சென்சார் போர்டு இரண்டு கெட்ட வார்த்தைகளை நீக்குமாறு ஷங்கரிடம் கூறியிருக்கிறது.அந்த நேரத்தில் கமலை வைத்து அந்த வார்த்தைகளை மாற்றி டப்பிங் பேச வைக்க முடியவில்லையாம். எனவே இந்தியன் தெலுங்கு டப்பிங்கில் கமலுக்கு குரல் கொடுத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவர்களை வைத்து பேச வைத்திருக்கிறார்கள்.இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை பார்த்த சென்சார் போர்டு அதற்கு யு/ஏ சான்று வழங்கி இருக்கிறது. ஆனால் படத்தில் சில திருத்தங்களை செய்யுமாறு கூறியிருக்கிறது.
படத்தில் வரும் 9 கெட்ட வார்த்தைகளை நீக்கவும், பிற காப்பிரைட் கண்டன்ட்டை பயன்படுத்தியதற்கு தடையில்லா சான்று சமர்ப்பிக்க வேண்டும் இல்லை என்றால் அந்த காட்சிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

இந்தியன் 2 படம் மூன்று மணிநேரம் ஓடினாலும் பார்வையாளர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் விறுவிறுப்பாக செல்லும் என சொல்லப் படுகிறது.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!