தேவலோகத்து தேவதையாய் மின்னும் கண்மணி சேகர் : வைரலாகும் கியூட் வீடியோ..!

Author: Rajesh
16 April 2022, 3:43 pm

சின்னத்திரையில் தற்போது காதல் ஜோடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த செந்தில் – ஸ்ரீஜா, ராஜா ராணி சஞ்சீவ் – ஆலியா மானசா, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா- ஆர்யன், ராஜா ராணி 2 ஹீரோ சித்து – ஸ்ரேயா என லிஸ்ட சமீப காலமாக கூடிக்கொண்டே செல்கிறது.

இந்த வரிசையில், தற்போது புதிதாக இணைந்திருப்பது இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன். இவர் பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், தான் தற்போது நடிகர் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

நவீன் மற்றும் கண்மணி இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதனால் அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?