சின்ன பொண்ணு மாதிரி இருந்தா யாரு சீரியல் பார்ப்பாங்க? எடை அதிகரிக்க கேப்ரியல்லா சாப்பிடும் உணவு இது தான்!

Author: Shree
9 June 2023, 11:33 am

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல் நடிகையாக இல்லங்கள் தோறும் மக்களை கவர்ந்து வருபவர் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன். இவர் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் குழந்தை நட்சத்திரமாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் சீரியல் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யா என்ற ரோலில் நடித்து அனைவரையும் வர்ந்துவிட்டார்.

இந்த ரோலுக்காக அவர் திருமணம் ஆன பெண் போல் இருப்பதற்காக உடலை எடையை அதிகரித்தாராம். அதற்காக காலை வேக வைத்த 4 முட்டைகள், காலை 10 மணிக்கு 10 இட்லி வரை சாப்பிடுவாராம். 11 மணிக்கு பழங்கள் எடுத்துக் கொள்வாராம். மதியம் மீல்ஸ், வாரத்திற்கு 3 நாள் நான் வெஜ், வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவாராம், அதிக புரோட்டின் இருக்குமாம். மாலை 6 மணி போல் வாழைப்பழம், நட்ஸ், பாதாம், முந்திரி, பிஸிதா ஆகியவை சேர்த்து திக்கான மில்க் ஷேக் குடிப்பாராம். இதெல்லாம் எடுத்துக்கொண்ட பின் உடல் எடை அதிகரித்ததாம். அதை சீராக மெயின்டைன் செய்ய தினந்தோறும் ஜிம்மில் ஒர்கவுட் செய்து வருகிறாராம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?