நீங்களும் இப்படித்தானா… இன்னும் மாறல : கணவர் குறித்து மகாலட்சுமி போட்ட திடீர் பதிவு..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 8:00 pm

சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதலில் தனது பயணத்தை தொடங்கிய சீரியல் நடிகை மகாலட்சுமி. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். பின்னர் நடிக்க வாய்ப்புகள் வர சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் வரும் அன்பே வா தொடரில் பிஸியாக நடித்துவருகிறார் மகாலட்சுமி.

இதற்கு இடையில் தான் திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் வந்தன. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் நடந்தது போல் மக்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தது, இப்போது அது கொஞ்சம் குறைந்து விட்டது.

மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போலவே தனது பணிகளை செய்து வருகிறார். இதனிடையே, அழகாக புடவையில் சூப்பரான போட்டோ ஷுட் ஒன்றை செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம மகாலட்சுமியா இது என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரவீந்தர். சமீபத்தில் தனது திருமணத்தின் 100வது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை அழகாக இருக்கிறது, நீங்களும் அப்படித்தான்” என கணவர் குறித்து மகாலட்சுமி பதிவிட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!