“மொட்டைமாடியில் இந்த ஆட்டம் தேவையா..?” சீரியல் நடிகையின் விபரீத Dance வீடியோ..!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 11:47 am
Farina Azad - Updatenews360
Quick Share

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ், குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். அதன்பின்பு அதன் டிஆர்பி எகிற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.

சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, சற்று நாட்களுக்கு முன் கர்ப்பமானார். தனது அதன்பின் பெரிய வயிறோடு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சில நாட்கள் முன், இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாட கேள்விகளை கேட்குமாறு கூறியிருந்தார் பரினா ஆசாத். பலர் நல்ல விதமாக கேள்விகள் கேட்க, சிலரோ திட்டி தீர்த்தனர். ஆனால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் பரீனா ஆசாத்.

அதில் ஒருவர், “ஒரு முஸ்லிமா நீங்க ரொம்ப தைரியமா இருக்கீங்க. எப்படி உங்க குடும்பத்தை சமாளிக்கிறீங்க? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பரீனா ஆசாத், மதங்களின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைப் பற்றி குறை கூறத்தான் அதெல்லாம் உருவாக்கப்பட்டது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முன்னேற வேண்டும். உங்கள் மனம் சொல்வதை கேட்டு முன்னேறி கொண்டேயிருங்கள் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், சக நடிகை ரேமா அசோக்குடன் மொட்டை மாடியில் நின்று நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” கொஞ்சம் உடம்பை பார்த்துக்கங்க..” என்று அக்கறையுடன் சொல்வது போல், ரேமாவை சைட் அடிக்க்கிறார்கள்.

Views: - 665

3

2