சுயநினைவில்லாத போது சீரியல் நடிகையிடம் பாய்ந்த மர்ம நபர் – பரபரப்பு பேட்டி!

Author: Rajesh
6 February 2024, 2:59 pm

தமிழ் திரைப்பட நடிகைகள் மட்டுமின்றில் சீரியல் நடிகைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது வழக்கமான பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக நடிகைகள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். ஆம், தமிழ் சீரியல்களில் 2000ம் காலகட்டங்களில் முன்னணி சீரியல் நடிகையாக பல்வேறு சீரியல்களில் நடித்து மக்களுக்கு பரீட்சியமானவர் சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி. இவர் 2007ல் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த சீரியல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது.

அதையடுத்து 2013ல் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி நடிகையாக நடித்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் வட்டாரத்தில் பிரபலமானார் சந்தியா ஜகர்லமுடி. அதன் பின்னர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு தெருநாய்கள் பாதுகாக்கும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல் அனுபவத்தை குறித்து பேசிய அவர்,

2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் கோவில் யானையுடன் எடுக்கப்பட்டது. அப்போது, அந்த யானை எதை மோசமாக தங்கிவிட்டது. அதனால் தனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்றினேன். அப்போது சம்பள இடத்திலேயே நான் சுய நினைவில்லாமல் மயங்கி விழுந்துக்கிடந்தேன்.

செத்த பிணம் போல் கிடந்த என்னை அங்கிருந்த பலர் சிகிச்சைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அந்த நேரத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத டான்சர் ஒருவர் என்னுடைய மார்பகத்தில் கை வைத்து சுகம் கண்டான் அதை என்னால் இன்று வரை மறக்கவே முடியவில்லை. அது ஒரு மோசமான அனுபவம் என கூறி வருந்தினார் சந்தியா. அவரின் இந்த பேட்டியை பார்த்த பலர் சீரியலில் இவ்வளவு மோசமான சம்பவங்கள் எல்லாம் நடக்குதா என அச்சத்தில் உள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?