“பட்டு பட்டு சுந்தரி.. தொட்டு தொட்டு புல்லரி..” – நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

Author: Rajesh
29 August 2022, 7:05 pm
Quick Share

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி. போன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேளிக்கையாக வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் தற்பொழுது கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்ற என் பேரு மீனா குமாரி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ள ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Views: - 240

3

2