“என்னது புருஷனோட Photo போட்டா கண்ணு படுமா?” இன்ஸ்டாகிராமில் விளாசிய ராஜா ராணி சீரியல் நடிகை !

8 July 2021, 7:09 pm
Quick Share

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி. போன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வைராலாகி வந்தது. தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் ” உங்கள் புருஷனோட புகைப்படங்களை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும், உங்கள் வீட்டு புகைப்படங்களை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும். உங்கள் மகிழ்ச்சியான புகைப்படங்களை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும். இப்படி சொன்ன எல்லோரையும் ப்ளாக் செயஞ்சாச்சு,. அந்த வரிசையில் இப்போது உங்கள் குழந்தை புகைப்படத்தை பகிராதீர்கள், கண்ணு பட்டுடும் எனகூற ஆரம்பித்துள்ளார்கள். அப்படி சொல்பவர்களையும் நான் ப்ளாக் செய்ய தான் போகிறேன. அதற்குள் நீங்களை போய்விடுங்கள். எனக்கு உங்கள் எதிர்மறையான அக்கறைகள் தேவையில்லை ” என்று கூறியுள்ளார்.

Views: - 793

14

7