விவசாய நிலத்தை ஆட்டையைப்போட்ட சூப்பர் ஸ்டாரின் மகள்? பரபரப்பில் சினிமாத்துறை…
Author: Prasad3 September 2025, 12:49 pm
பாலிவுட்டின் கிங் கான்
பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர்தான் ஷாருக்கான். இவரை கிங் கான் என பலரும் அழைப்பதுண்டு. பாலிவுட் உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். தற்போது இந்திய சினிமாவின் மிக அதிக மார்க்கெடுடன் கூடிய நடிகர்களில் முன்னணி வரிசையில் இருக்கிறார் ஷாருக்கான். இந்த நிலையில் ஷாருக்கானின் மகளான சுஹானா கானின் பெயர் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான புகாரில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி என பொய் சொன்ன சுஹானா?
ஷாருக்கானின் மகளான சுஹானா கான், “The Archies” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அலிபாக் என்ற பகுதியில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவேட்டில் குறிப்பிட்டுவிட்டு அந்த இடத்தில் பண்ணை இல்லம் கட்டியுள்ளதாக சுஹானா கான் மீது புகார் எழுந்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அலிபாக் பகுதியில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை சுஹானா கான் வாங்கியதாகவும் இது தொடர்பான நிலப்பதிவு ஆவணங்களில் சுஹானா தான் ஒரு விவசாயி என குறிப்பிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த புகார் குறித்த விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
