30 வருஷத்துக்கு மேல சினிமால இருந்தும் இதான் முதல் முறை? நெகிழ்ச்சியில் வாயடைத்துப்போன ஷாருக்கான்!
Author: Prasad2 August 2025, 11:08 am
பாலிவுட்டின் கிங் கான்
பாலிவுட் சினிமா உலகின் கிங் கான் என்று பாராட்டப்படுபவர்தான் ஷாருக்கான். 1992 ஆம் ஆண்டு “தீவானா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷாருக்கான் அதனை தொடர்ந்து பாலிவுட்டில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து மாஸ் நடிகராக உயர்ந்தார். கதாநாயகனாக நடிக்க தொடங்கியதில் இருந்து 5 ஆண்டுகளிலேயே ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார் இவர். தமிழில் கமல்ஹாசன் நடித்த “ஹேராம்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்.

இவ்வாறு இவர் சினிமா துறைக்குள் நுழைந்து 32 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளை இவர் பெற்றிருந்தாலும் இதுவரை தேசிய விருது ஒன்றை கூட இவர் பெறவில்லை. 30 வருடங்களுக்கு மேல் சினிமாத்துறையில் இருந்து வருகிறார். அதுவும் 25 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். “ஸ்வதேஸ்”, “சக் தே இந்தியா” போன்ற வித்தியாசமான கதைக்களங்களில் தனித்துவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் இவருக்கு தேசிய விருது இது வரை கிடைக்கவில்லை.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது
2023 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் நடித்த “பார்க்கிங்” திரைப்படத்திற்கு 3 பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது “வாத்தி” திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது “ஜவான்” திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து நெகிழ்ச்சி பொங்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷாருக்கான். அதில் பேசிய அவர், “நன்றியுணர்வாலும் பெருமையாலும் மனித நேயத்தாலும் மூழ்கிபோயுள்ளேன். தேசிய விருதால் கௌரவிக்கப்படுவது என்பது வாழ்நாள் முழுவதும் போற்றப்படும் தருணம். நடுவர்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் நன்றி. என்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
Thank you for honouring me with the National Award. Thanks to the jury, the I&B ministry… Iss samman ke liye Bharat Sarkar ka dhanyawaad. Overwhelmed with the love showered upon me. Half a hug to everyone today…. pic.twitter.com/PDiAG9uuzo
— Shah Rukh Khan (@iamsrk) August 1, 2025
குறிப்பாக இயக்குனர் அட்லீக்கும் அவரது குழுவிற்கும் எனக்கு ஜவான் படத்தில் வாய்ப்பளித்ததற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அட்லீ சார், நீங்கள் சொல்வது போல் இது Mass” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த “ஜவான்” திரைப்படம் ஷாருக்கான கெரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
