கூட பொறந்த தம்பியே ஒரு முறை.. யாருக்கும் இது மாதிரி நடக்கக்கூடாது.. விரத்தியில் ஷகீலா..!

Author: Vignesh
6 March 2024, 3:44 pm

பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.

டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.

இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.

shakeela- updatenews360

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை உடைத்தெரிந்தார். நடிகை ஷகீலா இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார். சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வரும் நடிகை ஷகீலா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, ஷகீலா என்னுடைய தம்பி நண்பருடன் பாண்டிச்சேரிக்கு சென்று இருந்தான். அப்போது அவர்கள் ஏ படத்தின் சீடியை வாங்கி பார்த்துள்ளனர்.

அந்த படத்தில் நான் நடித்துள்ளேன். அதனை பார்த்து அழுது கொண்டே பைக்கில் வந்திருக்கிறான். மூன்று நாட்களாக அவனுக்கு காய்ச்சல் இந்த விஷயத்தை என்னிடம் கூறினான். நான் சமாதானப்படுத்த நினைத்தேன். ஆனால், முடியவில்லை அன்று என்னுடைய தம்பியின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த காரணத்தினால் தான் நான் ஆபாச உடை அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடவில்லை நான் எச்சரிக்கிறேன் என்று ஷகிலா கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!