பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்- Water Melon ஸ்டார் திவாகர் மீது ஷகீலா அளித்த புகார்?
Author: Prasad12 August 2025, 6:08 pm
வாட்டர் மிலன் ஸ்டார்
கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீகிரியேட் செய்து இன்ஸ்டாவில் பிரபலமானவர்தான் திவாகர். ஆதலால் இவரை வாட்டர் மெலன் ஸ்டார் என்று அழைக்கின்றனர்? பல பேட்டிகளில் தனது நடிப்புத் திறமை மிகவும் அபாரமானது எனவும் வேறு எந்த நடிகராலும் நடிப்பில் தன்னை நெருங்க முடியாது எனவும் கூறி வந்தவர், ஒரு பேட்டியில் “சூரி போல் சின்ன சம்பளத்தில் என்னால் நடிக்க முடியாது” என கூறியது பலரையும் கடுப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கவின் ஆணவக்கொலை குறித்து கேள்வி எழுப்பியபோது, “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கம் இருக்கும். அந்த வழக்கத்தை மீறி திருமணம் செய்துகொள்ள கூடாது” என கூறினார். இவ்வாறு கூறியது சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து இவரை தனது வீடியோவில் விமர்சித்த ஜிபி முத்து குறித்து ஒரு பேட்டியில் கேட்டபோது, ஒரு குறிப்பிட்ட சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தினார் திவாகர். இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஷகிலா அளித்த புகார்!

இந்த நிலையில் பிரபல நடிகை ஷகிலா, திவாகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது திவாகர் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் சாதி ரீதியான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார், அவரது கருத்துக்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்புகாரில் ஷகிலா குறிப்பிட்டுள்ளார்.
