துணிவின் வாரிசு பிறந்தநாளுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்திய ஷாலினி : வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
4 January 2023, 11:30 am

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி (இன்ஸ்டாகிராம்) சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களையும் அப்போது வெளியிட்டு இருந்தார்.

பின்னர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அஜித்குமார் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் அஜித் குமார், மகள் அனோஷ்கா ஆகியோருடன் ஷாலினி உள்ளார். மேலும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் நடிகை ஷாலினி அஜித்குமார் பகிர்ந்து இருந்தார்.

ajith - updatenews360

இந்நிலையில் மகள் அனோஷ்காவின் 15-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங்” என‌ நடிகை ஷாலினி பதிவிட்டுள்ளார். மேலும் மகள் அனோஷ்கா உடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?