என்னை தூக்கிப்போட்டு பந்தாடினார் பயில்வான்… அப்போவே அஜித்திடம் Complain செய்த ஷாலினி!

Author: Shree
5 July 2023, 2:51 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில், 1987ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான மைக்கேல் ராஜ் திரைப்படத்தில் ஷாலினி குழந்தையாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றில் நானும் ரகுவரனும் குழந்தை ஷாலினியை மாறி மாறி தூக்கிப்போட்டு சண்டையிட்டிருப்போம். அதனை பொது விழா ஒன்றில் அஜித்துடன் வந்த ஷாலினி என்னை பார்த்ததும், அங்கிள் யார்னு தெரியுதா? இவர் தான் என்னை மைக்கேல் ராஜ் படத்தில் தூக்கிப்போட்டு பந்தாடினார் என அஜித்திடம் ஷாலினி Complain செய்தார். அந்த படம் 100 நாட்கள் ஓடி சூப்பர் ஹிட் ஆனது என பயில்வான் மேடையில் பேசியுள்ளார்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!