பிக்பாஸ் 4 – ல் ஒரு கொழுக்கு மொழுக்கு ஹீரோயினும் இருக்காங்க ! அப்போ அந்த விஷயத்துக்கு பஞ்சமே இருக்காது..!

12 September 2020, 5:24 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அது தவிர தற்போது இணையதளத்தில் உலவும் தகவல்கள் என்ன என்றால், இந்த நிகழ்ச்சியில், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்கிறார். இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், ஷிவானி நாராயணன், புகழ், அதுல்யா ரவி, அமிர்தா ஐயர், பூனம்பாஜ்வா, கிரண் போன்றவர்களும் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வருகிறது. இவர்களோடு ஒரு கொழுக்மொழுக் நாயகி ஷாலு ஷம்மு கலந்துகொள்ளப் போவதாக தெரிகிறது.

கடந்த பிக்பாஸ் சீசன் 3-லேயே இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் இறுதி நேரத்தில் மீரா மிதுனுக்கு கிடைத்து விட்டதாகவும் ஷாலு ஷம்மு ஏற்கனவே கூறியிருந்தார்

இப்போது, விட்ட வாய்ப்பை பிடிக்க சமூக வலைதளங்களில் உச்சி குளிரும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வரும் ஷாலு ஷம்முவால் பிக்பாஸ் சீசன் 4-ல் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என மக்கள் கூறி வருகிறார்கள்.

Views: - 0

0

0