Breaking – போலீஸ் என்னை கைது செய்யவில்லை…!அன்று என்ன நடந்தது ? நடிகர் ஷாம் Open Talk…!

4 August 2020, 11:38 am
Quick Share

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஷாம். இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ஜீவா இயக்கிய 12B திரைபடத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.

அதன் பிறகு பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார். ஆனால் படங்கள் சொல்லி கொள்ளும்படி அமையாததால், கடலில் வரும் நுரை போல் காணாமல் போனார். இன்றும் இவரது இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் படத்திற்கு இன்றளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கும் சமயத்தில், நடிகர் ஷாம் வீட்டில் சூதாட்டம் நடப்பதாக சொல்லி, காவல்துறையினர் ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் ஷாம் பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”நானும் என் நண்பர்களும் லாக்டவுன் என்பதால், வீட்டில் ஃப்ரென்ட்லியாக சீட்டு கட்டு விளையாடினோம். யாரோ இதை தவறாக தகவல் கொடுத்ததால், காவல்துறையினர் வந்து சோதனையிட்டார்கள். பிறகு இங்கு பணம் ஏதும் வைத்து விளையாடப்படவில்லை என தெரிந்த பிறகு, வெறும் கையெழுத்து போடவே எங்களை அழைத்து சென்றார்கள். 5 நிமிடத்தில் இது எல்லாம் முடிந்துவிட்டது. இங்கு எந்த சூதாட்டமும் நடக்கவில்லை. ஆனால், இதை பற்றி வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவையாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.