அந்த நடிகையா? அவங்க கிளாமரான நடிகை ஆச்சே… ரஜினி பேச்சால் சர்ச்சை..!!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2025, 4:59 pm
லோகேஷ் இயக்கி ரஜினி நடித்த கூலி திரைப்படத்தில், நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உட்பட பலர் நடித்துள்ளார். சுருதி ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு கடந்த சனிக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் பேசிய ரஜினி, முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்க போகிறீர்கள் என லோகேஷிடம் கேட்டேன், அதற்கு அவர், ஸ்ருதி சார் என்றார்.
உண்மையாவா? நான் ஸ்ருதியை 3 படத்தில் பார்த்திருக்கிறேன், கிளாமரான நடிகையாச்சே எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு என்று கேட்டேன்.

உடனே, அவரது அப்பா படங்களில் நடிப்பதை விட உங்கள் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார் என லோகேஷ் கூறியதாக ரஜினி பேசினார்.
கிளாமர் நடிகை என ரஜினி பேசியது, ஸ்ருதி மற்றும் கமல் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் ஒரு நடிகையை ஒரே மாதிரி டைக் காஸ்ட் செய்ய வேண்டும்? என விமர்சிதது வருகின்றனர்.
