இத சொல்றதுக்கு எனக்கு வெட்கமாகவே இல்லை- 46 வயது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் நடிகை?

Author: Prasad
13 August 2025, 2:15 pm

50 வயதானாலும்…?

பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நடிகைதான் ஷில்பா ஷெட்டி. இவர் 1993 ஆம் ஆண்டு ஷாருக்கானின் “பாஸிகர்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் “மிஸ்டர் ரோமியோ” திரைப்படத்தில் நடித்திருந்த இவர், “குஷி” திரைப்படத்தில் ‘மேக்கரினா’ என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். 

Shilpa shetty open talk that she hunting for groom for her sister

இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர், 2009 ஆம் ஆண்டு ராஜ் குண்ட்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இவருக்கு தற்போது 50 வயது. ஆனாலும் தனது உடலை சிக்கென்று மெயின்டெயின் செய்து வருகிறார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது தங்கையான ஷமிதா ஷெட்டிக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக வெளிப்படையாக பேசியுள்ளார். 

46 வயது தங்கை

ஷில்பா ஷெட்டியின் தங்கையான ஷமிதா ஷெட்டியும் பிரபல நடிகைதான். இவர் ஹிந்தியில் “மொஹப்பட்டைன்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில், விஜயகாந்தின் “ராஜ்ஜியம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு 46 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.

Shilpa shetty open talk that she hunting for groom for her sister

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டி, “இதை சொல்வதற்கு நான் வெட்க்கப்படவில்லை. நான் பல Most Eligible ஆன ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்பேன். எனது தங்கைக்காக கேட்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரிவிப்பேன். டேட்டிங் செயலியில் இணைந்துகொள் என்று கூட எனது தங்கையிடம் ஒரு முறை கூறியிருக்கிறேன்” என அப்பேட்டியில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். ஷில்பா ஷெட்டியின் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!