டூப்பா இருந்தாலும் சூப்பர்… இது தான் Low Budget விஜய் & திரிஷா – வைரலாகும் Recreation பாடல்!!

Author: Vignesh
5 December 2022, 5:00 pm

சிவாங்கியின் ரொமான்ஸ் பாடலின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குக் வித் கோமாளி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முலம் விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறார்.

Sivaangi-updatenews360-2

இவர் பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும், இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இவர் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருந்தது.

சிவாங்கி திரைப்பயணம்:

Sivaangi-updatenews360-2

அதிலும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கும்பல் இருந்தது. மேலும், சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து காசேதான் கடவுளடா என்ற படத்தில் கண்ணன் இயக்கத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

sivaangi - updatenews360

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சிவாங்கியின் ரொமான்ஸ் பாடலின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, தற்போது இவர் குருவி என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் தேன் தேன் என்ற பாடலை ஹர்ஷவர்தனுடன் இணைந்து பாடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு ரொமான்டிக்காக சிவாங்கி நடனமாடிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த வீடியோவை ரசிகர்கள் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?