மூச்சு காத்து கூட வெளிய போகாத அளவுக்கு ஷிவானியோடு நெருக்கமாக போஸ் கொடுத்த Big Boss பிரபலம் !

17 January 2021, 8:52 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4 இன்று பைனலை எட்டியிருக்கும் நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. போட்டியின் இறுதி கட்டத்தில் ரம்யா பாண்டியன், ஆரி, பாலாஜி, சோம் சேகர், ரியோ ஆகியோரில் ஒருவர் மட்டுமே கோப்பையை வெல்லப் போகிறார்கள். முன்னதாக கேப்ரில்லா கார்டன் பகுதியில் இருந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 4 பல சண்டைகள் சச்சரவுகள் தொடர்ந்தாலும் அதில் முக்கியமானவர்கள் என்று எடுத்துப்பார்த்தால் ஷிவானி, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, பாலாஜி, ஆரி, அர்ச்சனா என பாதி பேர் தான் வருவார்கள். இதில் ஷிவானி பாலாஜி பின்னாடி சுற்றுவதால் சர்ப்ரைஸ் visitஇல் வந்த அவரது அம்மாவிடம் செம டோஸ் வாங்கினார். அவர் திட்டியது சரியென்றும் தவறென்றும் இணையத்தில் பட்டிமன்றங்கள் பறந்தன. நீண்ட நாட்கள் தாக்கு பிடித்த ஷிவானி சிறிது நாட்களுக்கு முன்னர் தான் வெளியேறினார்.

ஆனால் தனக்கென தனியாக சமையல் யூடியூப் சேனல் நடத்திவந்த சுரேஷ் சக்ரவர்த்தி வெளிப்படையாக பேசி விடுவதால் வெறுப்பை சம்பாதித்து சீக்கிரமாக வெளியேறிவிட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட கேப்ரியலா வயது இருக்கும் ஷிவானி சுரேஷ் சக்கரவர்த்தியோடு பாசமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இந்த பிக் பாஸ் சீசன் 4 பைனல் நேரத்தில் இணையத்தில் உலாவி வருகிறது.

Views: - 7

0

0