நான் லண்டன்ல இருந்து வரேன் உங்க மகனை பார்க்கணும் – விஜய்யின் காதல் பற்றி கூறிய ஷோபா

Author: Shree
11 March 2023, 11:04 am

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் அம்மா ஷோபா, தமிழ்நாட்டில் இல்லாத பெண்கள் இல்லை. ஏன் லண்டனில் இருந்து மகனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தீர்கள் என தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டதற்கு,

நாங்க அப்படி எதுவும் பிளான் பண்ணி பண்ணல, 1996ல் லண்டனில் இருந்து கிளம்பி விஜய்யை பார்க்க சகோதரிகளுடன் சங்கீதா கிளப்பி இங்கு வந்தார். எங்கள் வீட்டின் வாசலிலே நின்று விஜய்யை பார்க்கவேண்டும் என கேட்டனர்.

அந்த சமயத்தில் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். அங்கு சென்று சந்தியுங்கள் என கூறியதும் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சந்தித்துள்ளனர். பின்னர் அவர்களை திரும்பவும் விஜய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். விஜய்யின் அப்பாவுக்கு அவர்களை மிகவும் பிடித்துவிட்டது. அப்படியே சில மாதம் காதல், பின்னர் கல்யாணம் என வாழ்க்கை தொடங்கினார் விஜய் என்றார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!