அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

Author: Selvan
28 February 2025, 9:06 pm

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல்

இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளிலில் தன்னுடைய குரலால் பாடி அசத்தி ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

இதையும் படியுங்க: நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

இவர் சினிமாவில் பாடுவது மட்டுமின்றி பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்,இந்த நிலையில் நாளை (மார்ச் 1) ஆம் தேதி சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த சூழலில் சமீபத்திய ஒரு பேட்டியில் ஒரு ஐட்டம் பாடலை பாடியதற்காக வெட்கப்படுகிறேன் என கூறியுள்ளார்.அதாவது அக்கினி பாத் படத்தில் வரும் ‘சிக்னி சமேலி’ என்ற ஐட்டம் பாடலை அர்த்தம் தெரியாமலே சிறு குழந்தைகள் பலர் பாடி வருகின்றனர்,மேலும் அந்த பாடல் நன்றாக இருக்கு என்று என்னிடம் கூறுவார்கள்.

அப்போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும்,இந்த பாடலை நான் பாடியதற்காக வெட்கப்படுகிறேன் என அந்த பேட்டியில் ஷ்ரேயா கோஷல் தெரிவித்திருப்பார்.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!