நிஜ சிங்கத்துடன் பயமே இல்லாமல் நடித்த விமல் பட நடிகை? வேற லெவல் மேடம் நீங்க…
Author: Prasad30 August 2025, 2:18 pm
அறியப்படாத நடிகை
“ஆற்றல்”, விமலின் “படவா” போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்தான் ஷ்ரிதா ராவ். இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக போகாத காரணத்தினால் இவரது பெயரும் அவ்வளவாக மக்களிடையே அறியப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதாவது கே சி ரவிதேவன் என்பவர் இயக்கி வரும் “சிங்கா” என்ற திரைப்படத்தில் ஷ்ரிதா ராவ் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை இயக்குனர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நிஜ சிங்கத்துடன் துணிச்சலாக நடித்த ஷ்ரிதா…
“கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகினோம். ஆனால் அவர்களுக்கு கதை பிடித்திருந்தபோதிலும் நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினார்கள். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடிக்க முன் வந்தார். மிகவும் சிறப்பான பங்களிப்பையும் வழங்கி வருகிறார்” என இயக்குனர் கே சி ரவி தேவன் கூறியுள்ளார்.
இத்திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவதாகவும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியாக இத்திரைப்படம் உருவாகி வருவதாகவும் இயக்குனர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
