சூப்பர் ஹீரோவுடன் நண்பர் மகள்; 36 வருடங்களுக்கு பிறகு இணைந்த இமயங்கள்,..
Author: Sudha7 July 2024, 12:31 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம், இருவரின் கூட்டணியில் வரவிருக்கும் முதல் திரைப்படம்.
ரஜின்காந்த் நடிக்கும் 171 வது திரைப்படம்.
படத்தை பற்றி தினம் தினம் புதிய அப்டேட்கள் வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவர் வில்லனாக நடிப்பாரா?என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் நண்பர் என்றொரு தகவலை திரைக் குழு வெளியிட்டது.
இது Mr.பாரத் திரைப்படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து சத்யராஜ், ரஜினிகாந்த் இணையும் படம்.
இந்நிலையில் புதிய தகவலாக சுருதி ஹாசன் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
கமல்ஹாசன் ரஜினிகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.இந்நிலையில் கமல்ஹாசன் மகள் சுருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
0
0