யார் இந்த பொண்ணு? எங்க இருந்துய்யா புடிச்சீங்க? ஸ்ருதிகா பேச்சை கேட்டு ஷாக் ஆன சல்மான் கான்!

Author:
11 October 2024, 10:52 am

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதிகா வழக்கம் போலவே தன்னுடைய காமெடியான பேச்சாலும் எதார்த்தமான நடவடிக்கைகளாலும் ஹிந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார் குறிப்பாக ஸ்ருதிகாவின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக இந்தி சினிமா ரசிகர்களும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

shrutika arjun

ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகா அர்ஜுன் சல்மான் கான் இடம் பேசும்போது மிகவும் அப்பாவியாக பேசினார். அப்போது தன்னுடைய கெரியரில் நடந்ததை பற்றி ஸ்ருதிகா சொல்ல அதைக் கேட்டு சல்மான் கான் விழுந்து விழுந்து சிரித்தார்.

அதாவது சல்மான் கான் ஸ்ருதிகாவை பற்றி பிரபல காமெடி டிவி ஷோவின் வின்னர் தான் இந்த ஸ்ருதிகா என கூறி அறிமுகம் செய்து வைக்க அதற்கு அடுத்து ஸ்ருதிஹா சல்மான் கான் இடம் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லட்டுமா அந்த ஷோவுக்கு முன்பு நான் கிட்டத்தட்ட நான்கு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.

ஆனால், அந்த நான்கு படமும் பிளாப் ஆகி போயிடுச்சு எனச் ஸ்ருதிகா சிரித்துக்கொண்டே கூற சல்மான்கான் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆடியன்ஸ் ஒட்டுமொத்த பேரும் சிரிக்க ஒரே காமெடி ஆகிவிட்டது. ஸ்ருதிகா இப்படி பேசினது ஆரம்பத்தில் மனநலம் சரியில்லாதவர் எனக்கூறி இந்தி ரசிகர்கள் விமர்சித்தாலும் பின்னர் நாட்கள் செல்ல செல்ல ஸ்ருதிகா உண்மையிலேயே ஜாலியான கேரக்டர் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.

shrutika arjun

இதையும் படியுங்கள் :கா*** கைவிட்டு வீடியோ எடுத்த கேமராமேன் – அதிர்ந்துப்போன ராஷ்மிகா!

இப்படியே சென்றால் ஸ்ருதிகா தான் ஹிந்தி பிக் பாஸின் 18 வது சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என தமிழ் ரசிகர்கள் கூறி அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இருந்தாலும் நீங்கள் தமிழ் பிக் பாஸ்க்கு வந்திருக்கலாம் செம Fun இருந்திருக்கும். இங்க நாங்க உங்கள ரொம்ப மிஸ் பண்றோம் எனக்கு கூறி வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!