இந்தி பிக்பாஸில் கலக்கும் ஸ்ருதிகா…. தமிழில் பேசிய அந்த இரண்டு வார்த்தை – வீடியோ!

Author:
11 October 2024, 10:10 pm

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதிகா வழக்கம் போலவே தன்னுடைய காமெடியான பேச்சாலும் எதார்த்தமான நடவடிக்கைகளாலும் ஹிந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார் குறிப்பாக ஸ்ருதிகாவின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக இந்தி சினிமா ரசிகர்களும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

shrutika

ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகா அர்ஜுன் அதில் அவ்வப்போது கியூட்டான தமிழ் வார்த்தைகளை பேசி அங்குள்ள ஹிந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய அழகிய பேச்சால் கவர்ந்திழுத்து வருகிறார். குறிப்பாக நேற்று ஸ்ருதிகா பிக்பாஸிடம் சும்மா பேசிக்கொண்டிருக்கிறோம் பிக் பாஸ் என கூற அதன் அர்த்தமோ அங்கு வேறு… ஹிந்தியில் சும்மா என்றால் முத்தம் என்று பொருள்.

அதை கேட்டதும் ஸ்ருதிகா செம ஷாக் ஆகி பிறகு சும்மா என்றால் இங்கு ஒன்றும் செய்யவில்லை அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம் என எடுத்து கூறி பிக்பாஸிற்கு புரிய வைத்தார். அதேபோல் தற்போது போட்டியாளர்களுடன் கலந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஸ்ருதிகா திடீரென பாவம் என்ற வார்த்தையை உபயோகிக்க பாவமா? அப்படின்னா என்ன போட்டியாளர்கள் கூற இந்த பாவத்திற்கான அர்த்தத்தையும் விளக்கினார் .

shrutika-updatenews360

இப்படி அடிக்கடி தமிழ் பேசுவதும் கலகலப்பாக போட்டியாளர்களுடன் பேசி சிரிப்பதுமாக Fun செய்து கொண்டே இருக்கிறார் ஸ்ருதிகா. இதனால் ஒட்டுமொத்த இந்திய பிக் பாஸ் ஆடியன்ஸ்களின் மனதையும் கவர்ந்திழுத்துவிட்டார். ஸ்ருதிகாவின் சமூக வலைத்தளங்களில் பிக் பாஸில் வீடியோக்கள் அவரது கணவர் அர்ஜுன் வெளியிட தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதை பார்த்த பலரும் இந்த முறை பிக் பாஸ் சீசன் 18 ஹிந்தி டிராபியை தட்டி தூக்க போவது சுருதிகாதான் என ஆணித்தரமாக அடித்து கூறுகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?