ஏய் சாமி நம்ம பாஷ பேசுதே… இந்தி பிக்பாஸுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஸ்ருதிகா – வீடியோ!

Author:
24 October 2024, 6:02 pm

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதிகா வழக்கம் போலவே தன்னுடைய காமெடியான பேச்சாலும் எதார்த்தமான நடவடிக்கைகளாலும் ஹிந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார் குறிப்பாக ஸ்ருதிகாவின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக இந்தி சினிமா ரசிகர்களும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

shrutika

ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகா அர்ஜுன் அதில் அவ்வப்போது கியூட்டான தமிழ் வார்த்தைகளை பேசி அங்குள்ள ஹிந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய அழகிய பேச்சால் கவர்ந்திழுத்து வருகிறார்.

தற்போது ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸ்க்கு தமிழ் கற்று கொடுத்து அசத்தி இருக்கிறார். ஹிந்தி பிக் பாஸ் முதல் முதலில் தமிழில் பேசுவதை கேட்ட ரசிகர்கள் ஏய் சாமி நம்ம பாஷ பேசுது என கமெண்ட் செய்து வருகிறார்கள் .

அதாவது நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வரும் வரை என்னுடைய கணவர் அர்ஜுனை சென்னை விட்டு எங்குமே செல்லக்கூடாது என சொல்லுங்கள் என ஸ்ருதிக பிக் பாஸிடம் சொல்ல அத அப்படியே பிக் பாஸ் தமிழில் அழகாக பேசுகிறார்.

shrutika

ஸ்ருதிக பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் பாங்காங்கிற்கு சுற்றுலா சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தை ஈர்த்து ஸ்ருதிகாவின் குறும்புத்தனமான பேச்சு அனைவரையும் கவர்ந்திழுப்பதாகவும் நிச்சயம் ஹிந்தி பிக் பாஸ் 18 வது சீசன் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா தான் என அடித்து கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 125

    0

    0