வீட்டை நல்லாதான் கட்டிருக்காங்க, ஆனால்? 3BHK படத்தை பார்த்து எகிறும் ரசிகர்கள்!

Author: Prasad
4 July 2025, 11:30 am

மிடில் கிளாஸ் மக்களின் கனவு!

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “3BHK”. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியான சமயத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எப்படியாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்ற கனவை சுமந்துகொண்டிருக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தங்களது அன்றாட வாழ்வில் எந்த வகையான துயரங்களை அனுபவிக்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒன் லைன்.  

siddharth 3bhk movie twitter review

இதில் சித்தார்த்துக்கு பெற்றோராக சரத்குமார், தேவயானி நடித்துள்ளனர். சித்தார்த்திற்கு தங்கையாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை அருண் விஷ்வா தயாரித்துள்ளார். அம்ரித் ராம்நாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் எக்ஸ் தளத்தில் இத்திரைப்படத்தை குறித்த ரசிகர்களின் விமர்சனங்களை பார்க்கலாம். 

இது படம் இல்லை, Life!

“3BHK என்பது அன்பு, 3BHK என்பது வாழ்க்கை, 3BHK என்பது யதார்த்தம். அனைத்து உணர்ச்சிகளும் அடங்கிய முழுமையான திரைப்படம். ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்” என ஒருவர் பாராட்டியுள்ளார்.

நேர்மையான முயற்சி

“3BHK திரைப்படம் கதைசொல்லலில் உண்மையாக நம்மை தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடிய தருணங்களை வைத்து படமாக்கப்பட்ட நேர்மையாக முயற்சி” என ஒருவர் பாராட்டியுள்ளார்.

பல உணர்ச்சிகள் கலந்த திரைப்படம்!

“பல கலவையான உணர்ச்சிகள் கலந்த காட்சிகள் இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை ஒரு சிறந்த அனுபவமாக ஆக்கியுள்ளது” என ஒருவர் பாராட்டியுள்ளார்.

Above Average திரைப்படம்!

“3BHK வீட்டை நன்றாக வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் பெயிண்ட் மந்தமாக இருக்கிறது. இது ஒரு Above Average திரைப்படம்” எனவும் ஒருவர் விமர்சித்துள்ளார். 

எனினும் பொதுவாக இத்திரைப்படத்திற்கு வெகுஜன ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!
  • Leave a Reply