இதை மட்டும் கெடுத்துவிட்றாதீங்க சித்தார்த் ப்ரோ! 3BHK படத்தின் டிரெயிலரை பார்த்து கதறும் ரசிகர்கள்…

Author: Prasad
26 June 2025, 1:25 pm

ட்ரோலில் சிக்கிய சித்தார்த்

கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தார்த் கலந்துகொண்டபோது பத்திரிக்கையாளர் ஒருவர் இயக்குனர் ஷங்கரிடம் ஊழல் குறித்து கேள்வியெழுப்பியபோது ஷங்கர் பதிலளிக்க முற்பட்டார். அந்த சமயத்தில் திடீரென இடையில் தனது மைக்கில் பாடத்தொடங்கினார் சித்தார்த். “இயக்குனரையே பேசவிடாமல் சித்தார்த் ஓவர்டேக் செய்கிறாரே” என்று ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர். 

siddharth starring 3bhk movie trailer released

அதனை தொடர்ந்து பல பேட்டிகளில் சித்தார்த் பேசிய பல விஷயங்கள் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தன. “இவர் ஓவராக வாய்விடுகிறார்” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இவர் ஒரு பேட்டியில் “இந்தியன் 2” திரைப்படத்தை மிகவும் புகழ்ந்து பேசினார். ஆனால் அத்திரைப்படம் தோல்வியை கண்டது. “இவர் ஓவராக பேசியதால் அத்திரைப்படம் ஃப்ளாப் ஆனது” என சில ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

3BHK

இந்த நிலையில் சித்தார்த் தற்போது “3BHK” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சரத்குமார், தேவயானி ஆகியோர் சித்தார்த்திற்கு பெற்றோராக நடித்துள்ளனர். மேலும் மீதா ரகுநாத் சித்தார்த்திற்கு தங்கையாக நடித்துள்ளார். 

“எட்டு தோட்டாக்கள்”, “குருதியாட்டம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அம்ரித் ராம்நாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் அருண் விஷ்வா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். 

வாடகை வீட்டில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் எப்படியாவது தனக்கென ஒரு சொந்த வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கனவில்  கடுமையாக உழைக்கிறது. சொந்த வீடு கட்ட அவர்களுக்கு பல தடைகள் வருகிறது. அப்படிப்பட்ட தடைகளை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்ற கதையம்சத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

siddharth starring 3bhk movie trailer released

இத்திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. “Good Night”, “Tourist Family” ஆகிய திரைப்படங்களின் வரிசையில் ஒரு மிகச்சிறந்த மனதிற்கு நெருக்கமான Family Drama திரைப்படமாக இது அமையும் என இத்திரைப்படத்தின் டிரெயிலரை பார்க்கையில் தெரிய வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த டிரெயிலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் சிலர், “சித்தார்த் கொஞ்சம் அமைதியாக இருந்தால் இந்த படம் நிச்சயம் ஓடும்” என ட்ரோல் செய்தும் வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!