சரியா பண்ணலன்னு ஓங்கி அறைந்தார்… பிரபல நடிகை மீது ஷகிலா பகீர் குற்றசாட்டு!

Author: Rajesh
29 January 2024, 1:53 pm

ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

silk smitha - updatenews360.jpg 2

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

அண்மையில் நடிகை ஷகீலா பேட்டி ஒன்றில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பேசியுள்ளார். அதாவது, நான் அறிமுகமான முதல் படமே சில்க் ஸ்மிதாவுடன்தான். அந்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தேன். கதைப்படி ஒரு காட்சியில் அக்காவான சில்க் ஸ்மிதா, தங்கையான என்னை அறைய வேண்டும்.

அப்போது அவர் என்னை உண்மையிலே ஒங்கி அறைந்துவிட்டார். பின்னர் என்னை அழைத்து தப்பா எடுத்துக்காதே… நீ அரை நிர்வாண உடையில் இருப்பதனால் ஒரே டேக்கில் ஓகே ஆகவேண்டும் என்பதால் காட்சி தத்ரூபமாக அமைய ஓங்கி அறைந்தேன். இல்லையென்றால் நீ இன்னும் சில மணிநேரம் இத்தனை பேர் முன்னாடி அரைநிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கவேண்டியிருக்கும் என்றார். எனவே சில்க் ஸ்மிதா உண்மையிலே தங்கமான குணம் கொண்டவர் என ஷகிலா அந்த பேட்டியில் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!