சிம்புவுக்கு விரைவில் டும்..டும்..டும்.. பிக் பாஸ் பிரபலத்தை திருமணம் செய்கிறார்? வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 7:02 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘Oo Solriya Oo Oohm Solriya’. இதில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால் மற்றும் அனிதா சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ‘உங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்ட மிகவும் நகைச்சுவையான செய்தி என்ன’ என்று இந்த மூவரிடமும் தொகுப்பாளினி பிரியங்கா கேட்டார்.

இதற்க்கு பதிலளித்த ஐஸ்வர்யா தத்தா ‘எனக்கும் நடிகர் சிம்புவுக்கும் திருமணம் என்று செய்தி வந்தது’ என கூறினார். அவரை தொடர்ந்து சாக்ஷி அகர்வால், ‘நான் தான் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் முதல் Girl Friend என்று செய்தி வெளிவந்தது’ என்று கூறினார்.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 1864

    17

    17