போடு வெடிய… தக் லைப் படத்தில் துல்கர், ஜெயம் ரவிக்கு பதில் இணையும் முன்னணி ஹீரோ..!

Author: Vignesh
26 March 2024, 6:12 pm

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.

தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது. எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

kamal haasan

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தக்லைஃப் படத்தில், திரிஷா, கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சர்பியா நாட்டிற்கு படக்குழு சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் டேட் பிரச்சனை காரணமாக படத்ததில் இருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

kamal-updatenews360

அவருக்கு பதிலாக மணிரத்னம் யாரை தேர்வு செய்து நடிக்க வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு பதிலாக நானியை நடிக்க வைக்க முயற்சிகளை படக்குழு மேற்கொண்டு வருவதாகவும், இந்த படம் நானிக்கு தமிழில் மிகப்பெரிய கம்பவுக்காக அமையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Thug Life

இந்நிலையில், தற்போது சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் காக அமெரிக்காவில் இருந்த கமல்ஹாசன் நேரடியாக இந்த படத்தின் ஷூட்டிங் காக செர்பியா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இந்த ஷூட்டிங்கில் கமல் பங்கேற்க முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பணிகளில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்.

Thug Life

இதனை தொடர்ந்து, அந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த, மாதம் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதை அடுத்து, கமலஹாசன் படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, செர்பியாவில் நடைபெற இருந்த ஷூட்டிங் கமலஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக முன்பே கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்த தகவலின்படி அந்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இன்னும் ஒரு மாத காலத்திற்கு பட குழுவினர் அடுத்த கட்டம் குறித்து திட்டமிட முடியாத நிலையில் உள்ளனர். இது போன்ற குளறுபடியினால் தான் முன்னதாகவே துல்கர் சல்மான் கால்ஷிப்ட் பிரச்சினையை காரணம் காட்டி படத்தில் இருந்து முன்னதாகவே விலகினார். தற்போது, ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து இதே பிரச்சினையால் தான் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

Simbu - updatenews360

இந்நிலையில், சிம்பு தக் லைப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கமல் தயாரிப்பில் சிம்பு எஸ் டி ஆர் 48 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிம்பு தக் லைப் படத்தில் நடித்திருப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், நடிகர் அரவிந்த்சாமி உடனும் மணிரத்தினம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 251

    0

    0